தந்தையால் மகளுக்கு நன்கொடையாக கொடுக்கப்படும் அசையாச் சொத்து சீதனம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டால் அந்த நன்கொடை சட்டப்படி செல்லாது. எந்த உரிமையையும் வழங்காது.
தந்தையால் மகளுக்கு நன்கொடையாக கொடுக்கப்படும் அசையாச் சொத்து சீதனம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டால் அந்த நன்கொடை சட்டப்படி செல்லாது. எந்த உரிமையையும் வழங்காது.
(2008-1-MLJ-Madras-743)
அசையாச் சொத்து தானத்திற்கு பதிவு கட்டாயம் எனில் ஆவணம் கட்டாயம் பதிவாகியிருக்க வேண்டும்.
PSG Ganga Naidu & Sons Vs Special Commissioner, Land Reforms
(2011-2-CTC-88 to 101-Mad)
கடவுளுக்கு அளிக்கப்படும் தானம் சமயம் சார்ந்த அறக்கட்டளையாகி விடுவதால் அதற்கு பதிவு விலக்கு உள்ளது.
Sainath Manthir Trust Vs Vijaya
(2011-2-SCC-631)
விற்பனை ஒப்பந்தத்தை கட்டாய பதிவுக்கு உட்படுத்த வேண்டும் இதன்மூலம் குறைந்த மதிப்பீடு, கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிக்க முடியும். குண்டர்கள் படை சொத்து வர்க்கத்தில் ஆட்சி செய்யும் முறை மாறும். ஒரு நோயை வளரவிட்டு, பின்னர் அதை குணமாக்க முயற்சி செய்வதைவிட ஆரம்பத்திலேயே அதை தடுப்பது மேல்.
Ashok Kumar Vs Govindhammal
(2011-1-KLT(S. N) - 6-SC)
மனைவிக்கே அசையாச் சொத்தை நன்கொடையாக கொடுத்தாலும், அந்த நன்கொடை ஆவணம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
Income tax Officer Jaipur Vs Sireamal Navalakka
(AIR-2001-SC-3468)
(2001-6-SCC-641)
ஒரு ஆவணம் மதிப்பிட இயலாததாக இருக்கும்போது, அதனை ரூ. 100க்கு அதிக மதிப்புள்ளதாக கருத இயலாது. எனவே இது போன்ற ஒப்பந்த ஆவணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டியதில்லை.
A. S. Elango Vs Palanisamy
(2009-4-CTC-627-Mad)
அதிகார ஆவணம் அசையாச் சொத்துக்கள் மீது உரிமையை ஏற்படுத்திய நிலையில், அதனை ரத்து செய்து அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்க முடியாது. அதிகாரம் கொடுப்பது போல் அதனை ரத்து செய்வதையும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் . அப்படி இல்லாத பட்சத்தில் முகவரால் ஏற்கனவே விற்பனை செய்துவிட்டதை இது பாதிக்காது.
Chandrama Singh Vs Mirsha Anish Ahmed
(2011-3-ALJ-384-Alagapath)
சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 117ன் படி விவசாய நிலக்குத்தகை ஆவணங்களுக்கு பதிவு கட்டாயம் அல்ல
Shyamlal Vs Deepa Das
(AIR-2011-NOC-187)
11 மாதங்களுக்கு மேற்பட்ட அசையாச் சொத்தின் குத்தகை எதுவும் பதிவுச் சட்டம் பிரிவு 17(1)(டி)ன்படி கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
S. Ranganathan Vs S. Venkateshan
(AIR-1995-Mad-157)
ஒருவர் தத்து எடுக்கப்பட்டார். பின்னர் தத்து பிள்ளைக்கே தத்து எடுத்துவர் உயில் எழுதி வைத்தார். நீதிமன்றம் தத்து எடுக்கப்பட்டதை அவர் இதற்கு மேலும் நிரூபிக்க தேவையில்லை என்று தீர்ப்பு கூறியது.
சட்ரசால் ஏ. டெல்ரான்டே Vs பிரபாகர் ஏ. டெல்ரான்டே
(2010-1-Bom-CR-170)
வெறும் ஆவணம் ஒருவர் கையில் இருப்பதால் மட்டுமே அது பத்திர அடமானமாக கருத முடியாது.
Sri Visalam Chit Fund Vs Vasudev Asari
(2003-2-MLJ-105-Mad)
ரூபாய், 11,22,000/-ஐ பெற்றுக் கொண்டதை மட்டும் தெரிவிக்கும் ஒப்புகை சீட்டுக்கு (Acknowledgement) பதிவு தேவையில்லை.
Sanjana Enterprises Vs Jinny Steels
(2010-109-RT-344-A.P)
வசதி உரிமைகளை உருவாக்க பதிவு ஆவணம் அவசியம் இல்லை. வாய்மொழியாக கூட இருக்கலாம்.
மத்தாய் Vs ஜோர்டிபோலோஸ்
(2011-3-RCR-CIVIL-1410)
அடமானம் கட்டாய பதிவுக்கு உட்பட்டது. எனவே அடமான உரிமை ஒப்பளிப்பு ஆவணமும் (assignment of mortgage rights) கட்டாயம் பதிவாக வேண்டும்.
Rahamath Ulla Vs R. Murugaian
(2010-89-AIC-800-Mad)
நன்றி...!
Comments
Post a Comment