அபராதம் மட்டும் தண்டனையாக விதிக்க பட்டால்..............................

அபராதம் மட்டும் தண்டனையாக விதிக்க பட்டால்..............................

*அபராதம் செலுத்த பொது மக்களுக்கு 2 மாதங்களுக்குள் 3தவணைகளாக செலுத்துவதற்கு அவகாசம்* வழங்கும் சட்ட பிரிவு *கு.வி.மு.ச. 1973 இன் 424 வது பிரிவு*

வழக்கில் நிறைவேற்றப்பட வேண்டிய தண்டணையை நிறுத்தி வைப்பது தொடர்பாக விளக்கிக் கூறியுள்ளது

(1)   ஒரு குற்றவாளிக்கு அபராதம் மட்டுமே தண்டணையாக விதிக்கப்பட்டும், அந்த அபராத தொகையைச் செலுத்த தவறினால் சிறை தண்டனை என்று விதிக்கப்பட்டிருக்கும் போது, அந்த அபராத தொகையை உடனடியாக செலுத்தாவிடில் அந்த நீதிமன்றம்......

(2)    அத்தகைய உத்தரவு போடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு மிகாத ஒரு காலத்துக்குள் அதனை முழுமையாக செலுத்த வேண்டும் எனவும், அல்லது 2 அல்லது 3 தவனை.ளில் அதில் முதல் தவணை அந்த நாளில் இருந்து 30 நாட்களுக்கு மிகைப் படாமல் இருக்க வேண்டும் எனவும் மற்ற தவணைகளை 30 நாட்களுக்கு மேற்படாத இடைவெளியில் செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிடலாம் என நீதிமன்றத்திற்கு கடப்பாடு விதித்துள்ளது

(ஆ)   விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்து குற்றவாளியைத் தாம் தக்கதெனக் கருதும் பிணையாட்களுடன் அல்லது அப்படி இன்றி அத்தகைய அபராதம் அல்லாதவிற்றைச் செலுத்தப்படுவதற்கு என குறிப்பிட்ட நாளில் அல்லது அதற்கு முன் நீதிமன்றத்துக்கு வருகை தருவதாக ஒத்துக் கொண்டு ஒரு கடப்பாட்டு ஆவணத்தை இயற்றி தந்த பின்னர் அவரை விடுவிக்க லாம் _அப்படி குறிப்பிட்ட கடைசி நாளுக்குள் அந்த அபராத தொகை அல்லது அதன் தவணை செலுத்தப்படவில்லை எனில் அதற்குரிய சிறை தண்டனையை உடனே நிறைவேற்றுமாறு ஆணை விடுக்கலாம்
 

(2)   அதே போன்று ஒரு தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ள போது அந்த தொகை செலுத்தப் படாவிடில் அதற்கான சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பின், அந்த தொகை செலுத்தப்படாத போது, (1) வது கிளைக் கூறில் சொல்லப்பட்டவாறு அனுசரிக்கப்பட வேண்டும் அந்த உத்தரவுக்கு இலக்கான நபர் அந்தக் கிளைக் கூறில் உள்ள படி ஒரு கடப்பாடு ஆவணத்தை இயற்றித் தரதவறினால் அந்த நீதிமன்றம் அவரை உனே சிறைக்காவல் தண்டனையை விதிக்கலாம் என வகுத்துரைத்துள்ளது

இந்த சட்டப் பிரிவு பற்றி இவ்வசதியை பற்றி உங்களின் வழக்கறிஞர் கூறியுள்ளாரா?

இது போல தண்டனையை பெற்றவர்கள் 2 மாதத்திற்குள் அபாராதத்தை மூன்று தவணைகளாக செலுத்த எந்த வழக்கறிஞராவது பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்துள்ளார்களா?


Comments