காவல் நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்ற சட்ட விரோதமான கட்டப் பஞ்சாயத்து மற்றும் காவல் நிலைய சித்திரவதை /மனித உரிமை மீறல் தொடர்பாக புகார்மனு.

"ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்"

அனுப்புநர் : 
குருமூர்த்தி வயது-32
த / பெ.பாக்கியராஜ் 
4/467, பூக்காராத்தெரு,
வதுவார்பட்டி கிராமம்,
செட்டிகுறிச்சி அஞ்சல்,
அருப்புக்கோட்டை வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.
 செல் :9786580588

 பெறுநர் :
 உயர்திரு. தலைவர் அவர்கள்,
தேசிய மனித உரிமைகள் ஆணையம்,
நீயுடெல்லி.

 எதிர்மனுதாரர்கள்:
1) திரு. வெங்கடேசன்,
காவல் துணை கண்காண்ணிப்பாளர்,(முன்னாள்),
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம்.

2) திரு.அன்னராஜ்,
காவல் ஆய்வாளர், (முன்னாள்),
சீர்மிகு காவல் நிலையம்,
பந்தல்குடி,
அருப்புக்கோட்டை வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

3) திரு. பிச்சை,
காவல் சார்பு ஆய்வாளர் (முன்னாள்),
சீரமிகு காவல் நிலையம்,
பந்தல்குடி,
அருப்புக்கோட்டை வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.
 
 4) M. பார்த்திபன்,
காவல் ஆய்வாளர்,
சீர்மிகு காவல் நிலையம்,
பந்தல்குடி,
அருப்புக்கோட்டை வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

5) திரு.முத்துராஜ்,
காவல் சார்பு ஆய்வாளர்,
சீர்மிகு காவல் நிலையம்,
பந்தல்குடி,
அருப்புக்கோட்டை வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

6) திரு.முனியசாமி,
தலைமை காவலர்,
சீர்மிகு காவல் நிலையம்,
பந்தல்குடி
அருப்புக்கோட்டை வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

7) திரு.விஜயகுமார்,
தலைமை காவலர்,
சீர்மிகு காவல் நிலையம்,
பந்தல்குடி,
அருப்புக்கோட்டை வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

8) மற்றும் பெயர் தெரியாத பார்த்தால் அடையாளம் கூறக்கூடிய (4) காவலர்கள்.

 மதிப்பிற்குரிய ஐயா ,

பொருள் :
 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி காவல் நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்ற சட்ட விரோதமான கட்டப் பஞ்சாயத்து மற்றும் காவல் நிலைய சித்திரவதை /மனித உரிமை மீறல் தொடர்பாக புகார்மனு.

1. மனுதாராகிய நான் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை  வட்டம், வதுவார்பட்டி கிராமம், பூக்காரத்தெரு,  கதவு எண் 4/467 என்ற முகவரியில் குடியிருந்து வரும் பாக்கியராஜ் என்பவரின் மகன் குருமூர்த்தி, வயது 32 ஆகிய நான் அகத்தூய்மையோடும்/ உளப்பூர்வமாகவும் /எவ்வித உள்நோக்கமும் இன்றியும் வழங்கும் (அபிடவிட்டு) சத்தியபிரமாணம் யாதெனில்.....

2)  மனுதார் ஆகிய எங்கள் குடும்பத்தாருக்கும் பெருமாள்  மகனாகிய நல்லையன் என்பவர் குடும்பத்தாருக்கும் எங்களது பூர்வீக சொத்து தொடர்பாக கடந்த  2018 ஆம் ஆண்டு முதல் நிலத் தாவா இருந்து வருகிறது. மேலும் அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றம் O. S. No. 154/2012 இல் கடந்த 27.11.2013 ஆம் தேதி மனுதாராகிய எங்கள் குடும்பத்தாருக்கு பாகம் உள்ளது என தீர்ப்பளித்துள்ளது/ உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக எங்களது குடும்பத்தாருக்கு பாகம் கொடுக்க கூடாது என்ற கெட்ட நோக்கத்தோடு பாகம் பிரிக்கப்படாத நிலத்தில் சட்ட விரோதமாக வீடுகட்டிக் கொண்டுள்ளார். இவர் வீடுகட்டும் முன்பே பாகப்பிரிவினை பரீகாரம் கேட்டு அருப்புக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு எண்.O. S. No.83/2019 தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் மேற்படி வழக்கில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் அருப்புக்கோட்டை O. S. No. 83/2019 இல் I. A. No. 1/2019 கடந்த 25.11.2019 ஆம் தேதியன்று கட்டிடம் கட்டுவதற்க்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது என தற்காலிக தடை உத்தரவு மாண்பமை நீதி மன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாண்பமை நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவுக்கு முரணாக/எதிராக பந்தல்குடி காவல் நிலையத்தினர் ஆதரவோடு  நல்லயன் த /பெ. பெருமாள் என்பவர் நீதி மன்றத்தின் தடை ஆணை அமலில் உள்ள காலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். 

3)  மேற்படி நிலத்தாவா தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 10.04.2019 தேதி எனது தந்தை பாக்கியராஜ் அவர்களை திரு. நல்லையன் கொலை செய்ய முயற்சித்து அதன் காரணமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை உள் நோயாளியாக எனது தந்தை பாக்கியராஜ் சிகிட்சை பெற்றுள்ளார். இந்த புகார்மனு மீது பந்தல்குடி காவல் நிலையம் கு. எண்.50/2019, u/s. 294(b), 506(2) இ. த. ச. வழக்கு (1) P.பாக்கியராஜ், (2) P.குருமூர்த்தி, (3)P. இரெங்கம்மாள் ஆகிய 3 நபர்கள் மீது  பொய் வழக்கு பாதிக்கப்பட்ட எங்கள் மீது காவல் நிலையத்தினரால் தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த  17.04.2019 தேதி தாவா நிலத்தில்  எனது தாயார் திருமதி.இரங்கம்மாள், (அமரர்) விவசாயப் பணியை  செய்து வந்த போது வதுவார்பட்டிகிராமம் பெருமாள் மகன் நல்லையன் எனது தாயாரை கொலை செய்ய முயன்ற சங்கதி குறித்து வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்த குற்ற நிகழ்வு குறித்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிடென்ட் ரெக்கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

5)  மேலும் கடந்த 27.04.2019 தேதி பந்தல்குடி காவல் நிலையத்தில் எங்களது புகார் மனுமீது நடவடிக்கை எடுக்காதது குறித்து எனது தந்தை பாக்கியராஜ் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பிச்சை அவர்களிடம் எங்களது நில தாவா தொடர்பாக நீதி மன்ற பரீகாரம் கோரி உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதி மன்றத்திற்கே செல்லாமல் சட்ட விரோதமாக செயல்படுகின்ற திரு. நல்லயன் அவர்களுக்கு காவல் துறையினர் ஆதரவாக இருக்கும் சங்கதியை கேட்டபோது காவல் சார்பு ஆய்வாளர் திரு. பிச்சை எனது தந்தையை கீழே தள்ளி பூட்ஸ் காலால் மிதித்தும் லத்தி காம்பால் அடித்தும் மூத்த குடிமகன் என்று கூடபாராமல் ஒருமையில் பேசியும் காவல் நிலைய சித்திரவதையை செய்துள்ளார். மேலும் மேற்படி நல்லயன் சட்ட விரோதமாகத்தான் செயல்படுவார் என்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் எதிராக செயல்பட்டால் மேலும் பல்வேறு பொய் வழக்குகளை தொடுபபோம் என்றும் மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்தார். இதன் காரணங்களால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்படைந்த எனது தந்தை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதற்கு ஆக்சிடென்ட் ரெக்கார்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கடந்த 02.05.2019 தேதியன்று எனது தந்தை திரு. பாக்கியராஜ் அவர்களால் புகார் மனு செய்யப்பட்டுள்ளது. இப் புகார் மனு மீதும்  காவல்துறையினரால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

6) மேலும் மேற்காணும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் வதுவார்பட்டி கிராமத்தில் வசிக் கும் பெருமாள் மகன் நல்லயன் என்பவர் பந்தல்குடி காவல் நிலையத்தினரின் ஆலோசனையின் பெயரில் திட்டமிட்டு கடந்த 04.05.2019 தேதி அதிகாலை 04.30 மணிக்கு பெருமாள் மகன் நல்லையன் தனது குடும்பத்தாரோடு என்னை கொலை செய்ய முயன்றனர். இதில் பலத்த காயமடைந்த என்னை எனது குடும்பத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையால் ஆக்சிடென்ட் ரெக்கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது பந்தல்குடி காவல் நிலையம் கு. எண்.57/2019, U/S. 294(b), 341,324,506(2)இ.த.ச வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. குற்றம் செய்த பெருமாள் மகன் நல்லயன் கொடுத்த புகாரின் பேரில் என் மீதும், என் தந்தை பாக்கியராஜ் மீதும், எனது தாயார் திருமதி. இரங்கம்மாள் மீதும் எனது மனைவி இரங்கம்மாள் மீதும் பந்தல்குடி
காவல் நிலையம் குற்ற எண்.56/2019, U/S. 294(b), 324,307,506(2)and 109 IPC R/W. 40f TNPHW ஆக்ட்  வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனது தாயாரையும், எனது மனைவியையும் கைகுழந்தையுடன் 05.05.2019 தேதி காலை 07.00 மணியளவில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த என்னை பார்க்க வந்திருந்தபோது காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் தலைமையில் தலைமை காவலர் திரு. முனியசாமி மற்றும் விஜயகுமார் மற்றும் பெயர் தெரியாத பார்த்தால் அடையாளம் கூறக்கூடிய 4காவலர்கள் உடன் வந்திருந்து விசாரிக்க வேண்டியுள்ளது எனக்கூறி எனது தந்தை, தாயார், எனது மனைவி (கைகுழந்தையுடன்) பந்தல்குடி காவல் நிலையம் அழைத்து சென்று கைது செய்து இரவு 12.00 வரையில் பெண் என்றும் பாராமல் காவல் நிலையத்தில் வைத்திருந்து அதன் பின்னர் நீதிமன்றத்திறகு அழைத்து சென்று   சிறையில் அடைத்துள்ளனர். 

7) அதன் பின்னர் கடந்த 09.05.2019 தேதி மதியம் சுமார் 12.00 மணியளவில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எனது குடும்பத்தினர் எவரும் இன்றி மருத்துவ சிகிட்சையில் இருந்த என்னை  காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் தலைமையில் சுமார் 4 காவலர்கள் மருத்துவமனை வந்திருந்து மருத்துவரிடம் கட்டாயப்படுத்தி டிஸ்ஸார்ஜ் சம்மரி பெற்று என்னை மருத்துவமனை வளாகத்தின்னுள்ளேயே வைத்து என்னை காவல் ஆய்வாளர் காவலர்கள் அடித்து துன்புறுத்தி பந்தல்குடி காவல் நிலையம் கொண்டு சென்று காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் என்னை நோயாளி என்றும் பாராமல் அடித்து சித்திரவதை செய்தார் அதன் பின்னர் அன்றே என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்க்கு சாட்சிகள் உள்ளனர்.

8) மேலும் இதுபோன்ற பந்தல்குடி காவல் நிலையத்தினரின் தொடர்ந்த கட்டப்பஞ்சாயத்து மற்றும் பொய் வழக்கு தொடுத்தல் காரணமாக மனுதாரராகிய எனது தாயார் ரங்கம்மாள் மிகுந்த மன உளைச்சலோடு இருந்து உடல் நலமின்றி கடந்த 29.05.2021 தேதியில் இறந்து போனார்.

9) மேலும் கடந்த 06.09.2021 தேதியன்று மாலை சுமார் 05.30 மணியளவில் பந்தல்குடி காவல் நிலையத்திற்கு மேற்படி சிவில் தாவா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட உடல் காயத்துடன் 
புகார் மனுச் செய்ய எனது தந்தை பாக்கியராஜ் சென்றபோது  புகார் மனுவை பெற்று கொண்டு சார்பு ஆய்வாளர்  திரு.முத்துராஜ், என்பவர்  வழக்கின் உண்மை தன்மை குறித்து நேர்மையாக விசாரணை செய்யாமலும், அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றம் ஓ. எஸ். எண்.154/2012, உத்தரவு நாள்.27.11.2013 மற்றும் அருப்புக்கோட்டை, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஓ. எஸ்.No. 83/2019 வழக்கில் கடந்த 31.10.2019, மற்றும் 25.11.2019 ஆகிய தேதிகளில் வழங்கிய தீர்ப்புரை/ உத்தரவு ஆகியவற்றுக்கு விரோதமாக எனது தந்தையின் புகார்மனுமீது நியாயமான விசாரணை மேற்கொள்ளாமல் தன்னிச்சையாகவும் /ஒருத்தலைபட்சமாகவும் பந்தல்குடி காவல் நிலையத்தினர் எதிர்மனுதாருக்கு ஆதரவாக எங்களது விவசாய விளைநிலத்தை விட்டு சென்றுவிடுமாறும் மீறினால் பிணையில் வெளியே வர முடியாதவாறு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன். என்றும் மேற்காணும் 3,4,5 ஆகிய  அனைத்து எதிர்மனுதார்கள் முன்னிலையில் 2வது எதிர்மனுதார் கட்ட பஞ்சாயத்து செய்தார். மேலும் எனது புகார் மனுவிற்கு புகார்மனு இரசீது( CSR ) வழங்கவில்லை. அதன் பின்னர் உங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு தொடுக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ.20,000/ (ரூபாய் இருபத்தினாயிரம் மட்டும் ) இலஞ்சமாக வழங்க வேண்டும் என்று 9790924618 என்ற கைபேசி எண்ணில் இருந்து எனது கைபேசி எண் 9786580588 என்ற எண்ணுக்கு கடந்த 07.09.2021 ஆம் தேதியில் சுமாராக காலை 08.59 மணியளவில் என்னோடு தொடர்பு கொண்டு பேசினார். மேலும் பந்தல்குடி காவல் நிலையத்தின் முகவராக செயல்படும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் வதுவார்பட்டி  கிராமத்தில் வசிக்கும் பாட்டுக்காரர் என்ற முருகேசன் என்பவர் தனது கைபேசிஎண் 9843540982 இல் இருந்து எனது கைபேசி எண்ணுக்கு கடந்த 08.09.2021 தேதி மதியம் சுமாராக 12.57 மணியளவில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மேலும் மேற்படி லஞ்சப் பணத்தை நான் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் பந்தல்குடி காவல் நிலையம் கு.எண். 69/2021, u/s. 294(b), 323,324,506(2) இ. த. ச. பொய் வழக்கு தொடுத்துள்ளனர்.

10)  மேலும் மேற்காணும் பந்தல்குடி காவல் நிலைய காவல் அதிகாரிகள் அலுவலர்கள் கடந்த காலங்களில் செய்ய வேண்டிய வேலையை செய்யாமலும் செய்யக்கூடாததை செய்தும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 2 மற்றும் 3வது பிரிவுக்கு முரணாக அதிகார துஷ்பிரயோகம் ஆக  செயல்பட்டு வருகிறார்கள். மேலும் ஒரு உரிமையியல் சம்பந்தப்பட்ட புகார்களை விசாரிக்க கு. வி. மு. ச 149 இன்படி காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிடியாணை வேண்டும் குற்றம் சம்பந்தபட்ட புகார் மற்றும் சிவில் புகார்களை ஒரு மனுவாக கருதி காவல் துறையினர் விசாரிக்கலாம் ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என்றும், இதுபோன்ற புகார் மனுக்களை விசாரித்த நீதி மன்றத்தில் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி மனுவை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் CRL. OP. No. 5426/2009 கீதா@ஷர்மிளா and others Vs thi inspector of police W6, AWPS, அசோக் நகர் சென்னை என்ற வழக்கில் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்புரை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 14 வது பிரிவுப்படி எனது இந்த வழக்கிற்கும் பொருந்தும் என மனுதாரர் ஆகிய என்னால் கருதப்படுகிறது.

11) ஆகையால் அருள்கூர்ந்து தொடர்ந்து எங்கள் குடும்பத்தினர் மீது தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக பொய்யான புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் காவல் அலுவலர்கள் அதிகாரிகள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள குற்ற விசாரணை முறை சட்டம்  1973 இன் 197 வது பிரிவுப்படி அனுமதி வழங்கி நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்க படுகிறது.
மனுதார்.

தேதி:
இடம்:அருப்புக்கோட்டை 

இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் ........................... தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.

மனுதாரர்

இணைப்பு ஆவணங்கள் :
1) பாக்கியராஜ் பந்தல்குடி காவல் நிலையத்திற்கு கடந்த 15.04.2018 தேதி வழங்கிய புகார் மனு நகல்.
2) கடந்த 10.04.2019 தேதிய அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை ஆக்சிட்டென்ட் ரெக்கார்ட் நகல்.
3) பந்தல்குடி காவல் நிலையம் கு. எண்.50/2019 FIR நகல்.
4))கடந்த 31.10.2019 தேதி அருப்புக்கோட்டை உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகல்.
5) கடந்த 25.11.2019 அருப்புக்கோட்டை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு நகல்.
6) எனது தாயார் திருமதி. இரங்கம்மாள் இறப்பு சான்றிதழ் நகல்.

Comments