வழக்கறிஞர் உதவியில்லாமல் ஒரு வழக்கினை நேரடியாக நீதிமன்றத்தில் நடத்துவது பற்றி இந்த பகுதில் தொடர்ந்து பார்த்துக் கொண்டுள்ளோம்.

வழக்கறிஞர் உதவியில்லாமல் ஒரு வழக்கினை நேரடியாக நீதிமன்றத்தில் நடத்துவது பற்றி இந்த பகுதில் தொடர்ந்து பார்த்துக் கொண்டுள்ளோம்.

குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும்  முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) போடாத நிலையில் குற்ற செயல் நடைபெற்ற இடம்  மாநகர பகுதியாக இருப்பின் காவல் ஆணையாளர் அல்லது மாவட்ட பகுதியாக இருப்பின் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு  பதிவு அஞ்சலில் புகார் மனுவை அனுப்பிய (U/S 154 (3) Cr.P.C). பிறகு அந்த காவல் நிலையம் தொடர்புடைய அதிகாரம் உள்ள குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனி புகார் மனு (பிரைவேட் கம்ளைண்ட்) பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக கொடுத்து   முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்)  போடுவதற்க்கு நீதிமன்ற உத்திரவினை பெறலாம் 

மாதிரிக்காக ஒரு மனு 
மாதிரிக்காக மட்டுமே 
 
மான்பமை ஓமலுர் குற்றவியல் நீதிதுறை நடுவர் முன்பாக 
சி.எம்.பி. எண்   2015
பி.கே.கணேசன் (வயது )
த/பெ கந்தசாமி கவுன்டர்
அணைத்தோப்பு
பூசாரிப்பட்டி அஞ்சல்
ஓமலூர் வட்டம்
சேலம் மாவட்டம். -- புகார்தாரர்
இடையே
சுரேஸ்குமார், (வயது  )
காவல் ஆய்வாளர்,
தீவட்டிப்பட்டி காவல் நிலையம் ,
தீவட்டிப்பட்டி அஞ்சல், 
ஓமலூர் வட்டம், 
சேலம் மாவட்டம், --- எதிரி

புகார்தாரர் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 156 (3) மற்றும் 190 -ன் கீழ் பணிவுடன் தாக்கல் செய்யும் மனு

1. புகார்தாரர்: சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் பூசாரிப்பட்டி அஞ்சல் அனைத்தோப்பு கிராமம் என்ற முகவரியில் வசித்து வரும் கந்தசாமி கவுன்டர் மனக் சுமார் வயதுள்ள கணேசன் 

2. எதிரி: சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக தற்சமயம் பணியாற்றி வரும் சுரேஸ் குமார் 

3. புகார்தாரர்  தீவட்டிப்பட்டி தொடக்க வேளானமை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும்,  தீவட்டிப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்த்தின் தலைவராகவும்,  ஊராட்சி ஒன்றிய குழு துனை தலைவர் உள்ளிட்ட பல  பொறுப்புகளில்  இருந்து சமூக சேவையாற்றிய கிராம முக்கிய பிரமுகர் 

4. புகார்தாரரின்  உறவினரனான  கோனம்பட்டி செல்வராஜ் என்பவர் அவரின் மகனை கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் திரு சுரேஸ் குமார் செயல்பட்டுக் கொன்டும் கொலை வழக்கினை சமாதமானம் செய்தாகவும் அதற்க்கு செல்வராஜ் உடன்படாததால்  அவர் மீது பொய் வழக்கு  போடபோவதாகவும், மோட்டார் திருடியதாக சொல்லியும் மிரட்டி வருவதாகவும்  11-10-2014- காலை 09.00 மணிக்கு விசாரனைக்கு  தீவட்டிப்பட்டி காவல் நிலையம் வரச் சொல்லி  இருப்பதாகவும் தனக்கு உதவ வேண்டி அழைத்தமையால் அவருடன் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார்தாரரும்  செல்வராஜும் சென்று இருந்தனர் 

5. காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் இல்லாததால்  புகார்தாரரும்  செல்வராஜும் தலைமை காவலரிடம் தகவல்  சொல்லி விட்டு அருகில் உள்ள டீக்கடையில்  இருவரும் டீ சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இன்ஸ்பெக்டெர்  சுரேஸ் குமார்  புகார்தாரருடன் இருந்த  செல்வராஜை பார்த்து ஏன்டா பரதேசி நாயே  ஸ்டேசனில்  உக்காரம இங்க என்னடா புடுங்கர என்று கொச்சை வார்த்தைகளால் திட்டினார்  அதற்கு செல்வராஜ் விளக்கம் சொல்லியும் கேட்காமல் இண்ஸ்பெக்டெர்  சுரேஸ் குமார்   பைக்கை விட்டு இறங்கி  கொச்சைவார்த்தைகளால் திட்டிக்கொன்டு செல்வராஜ்  சட்டை காலரை பிடித்து தரதரவெண்று இழுத்து சென்றார். 

6. அப்போது  புகார்தாரர்  இண்ஸ்பெக்டர்  சுரேஸ் குமாரிடம்  உங்களை பார்க்க தான் ஸ்டேசன் வந்தோம் அய்யா இல்லாததால் டீ சாப்பிட வந்தோம் அவர் என்ன தப்பு செய்து விட்டார் ஏண் இப்படி பொது இடத்தில் அசிங்கப்படுத்திறங்க என்று புகார்தாரர்  சொன்னதற்கு இன்ஸ்பெக்டெர் புகார்தாரரை  பார்த்து என்னடா சொன்ன தேவடியா பையலே நீ இருக்கற துனிச்சல தான் இந்த பரதேசி பய ஆடரான் நான் சொல்லறத கேட்க மாட்டங்கரான் உன்னை உதைச்சு ஜட்டியோட இழுத்துக்கிட்டு போய் ரவுடி லிஸ்ட்டில் போடரேன் எவன் உன்னை காப்பத்துவான் பார்க்கின்றேன் என்று சொல்லி புகார்தாரரை  அடிக்க வந்தார்.  புகார்தாரரும் செல்வராஜும் கிளம்ப முயற்சி செய்த போது இன்பெக்டர் இருவரையும்  தடுத்து நிறுத்தி கொச்சையாக திட்டி உன்னை இங்கயே நாயை சுடுற மாதிரி சுட்டு பொசுக்கிடுவேன் என்று மிரட்டினார். சப்தம் கேட்டு  வந்த  அருகில் இருந்த சின்ன கவுண்டர் பூபதி வெங்கடாசலம் கோவிந்தன் ஆறுமுகம் பெரியசாமி  மற்றும் பலர் இன்ஸ்பெக்டெரை கண்டித்து என்னை சமாதனம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

7. இது தொடர்பாக புகார்தாரர்  11-10-2014-ல் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஓமலூர் காவல் துனைக் கண்காணிப்பாளர் ஆகியொருக்கு புகார் மனுக் கொடுத்துள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாததால் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 154 (3) ந் கீழ் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு  30.11.2014-ல்  ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் புகார் மனுவை அணுப்பியுள்ளார் 

8.  எதிரியின் செயலானது இதச 294 (b), 341, 506 (ii) ஆகிய சட்ட பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்ற செயலாகும்

எனவே  எதிரியின் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், மேற்கொன்டு  வழக்கினை புலன் விசாரனைக்கு  உத்திரவு செய்ய வேண்டுமாய் புகார்தார் வணக்கமாய் பிராத்திக்கின்றார்.

(கையொப்பம்)   புகார்தாரர்                        
மேலேகன்ட புகார்த்தாரர் ஆகிய நான் மேலேகன்ட பாராக்களில் கன்டுள்ள சங்கதிகள் யாவும் உண்மையென உறுதியாய் கூறி படித்துப்பார்த்து இன்று 17.11.2014-ல் ஓமலுரில் கையொப்பம் செய்தேன்.

(கையொப்பம்)   புகார்தாரர்

புகார்தாரர் தரப்பில் தாக்கல் செய்யும் ஆவணங்கள்

 வ.எண்  நாள்  ஆவணங்கள்  தண்மை 
 1  11.10.14  புகார் மனு    அலுவலக நகல்
 2  30.10.14  காவல் கண்காணிபாளர் அவர்களுக்கு அனுப்பிய புகார் மனு      அலுவலக நகல்
 3  01.11.14  அஞ்சல் ஒப்புகை அட்டை    அசல் 

(கையொப்பம்)   புகார்தாரர்

மனுவில் இணைக்க வேண்டிய விபரங்கள் தொடரும்

Comments