நீங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு பாதை இல்லையா பாதை கேட்டு மக்கள் நீதிமன்றத்தில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பம் மாடல் கீழே தரப்பட்டுள்ளது இதுபோல பாதிக்கப்பட்டு இருப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு பாதை இல்லையா பாதை கேட்டு மக்கள் நீதிமன்றத்தில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பம் மாடல் கீழே தரப்பட்டுள்ளது இதுபோல பாதிக்கப்பட்டு இருப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
"ஒப்புதலுடன் பதிவஞ்சல்"

அனுப்புநர் :
.......................................................,
த / பெ....................................., 
..............................................................தெரு,
..........................................அஞ்சல் ,
.......................................தாலுகா ,
.............................மாவட்டம் , 
செல் :..............................

 பெறுநர் :
உயர்திரு சேர்மன் அவர்கள் ,
வட்ட சட்ட பணிகள் குழு,
ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம்,
................................................
..................................................மாவட்டம் .

எதிர்மனுதார்கள்:
1)

2)

3)

ஜயா / அம்மையீர்

பொருள் :
நடை பாதையை மேற்காணும் எதிர்மனுதார்கள் அடைத்து இடையூறு செய்து வருவது குறித்து புகார் மற்றும் வசதி உரிமை சட்டத்தின்படி நடைபாதை பெற்று தர வேண்டுதல் தொடர்பாக .

1) மனுதாரர் ஆகிய நான்............................................ மாவட்டம்,..........................................தாலுகா,............................................ தெரு, கதவு எண்......................என்ற முகவரியில் குடியிருந்து வரும்..................................
 என்பவரின் மகனான.................................. வயது................. ஆகிய நான் உளப்பூர்வமாகவும் / அகத்தூய்மை யோடும் / நீதியின் நோக்கம் நிறைவேறுவதற்காகவும் வழங்கும் அபிடவிட் சத்தியப்பிரமாணம் யாதெனில்.......

2) மனுதாரர் ஆகிய எனக்கு பூர்வீக பாத்தியமான ................................... மாவட்டம்,................................................ கிராமம், சர்வே எண்:.......................ல் கடந்த............................. ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பசுமை வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி குடியிருந்து வருகிறேன் . இந்த வீட்டில் நான் மற்றும் எனது மகன்கள் என மூன்று குடும்பமாக வசித்து வருகிறோம் .

3) எங்கள் வீட்டிலிருந்து கிராமத்திற்குள் போக சர்வே எண்.............................. முழவதும் மற்றும்.............................. சர்வே எண்கள் வழியாகவே தற்போது எங்கள் வீட்டிலிருந்து கிராமத்திற்குள் போக வேண்டும் என்றால் மேற்படி சர்வே எண்களை கடந்து செல்ல வேண்டும் மேற்படி சர்வே எண்களில் குடியிருக்கும் எதிர் மனுதார்கள் தற்போது கடந்த சில நாடகளாக அந்த பாதையை என் குடும்பத்தை மட்டும் பயன்படுத்த விடாமல் அருகில் உள்ள குடும்பங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனது வீட்டிற்கு செல்லும் பாதையில் கல்லை ஊன்றி மறித்து விட்டனர் . என்னை தவிர மற்ற எதிர் மனுதார்கள் அனைவரும் உறவினர்கள் / நண்பர்கள் ஆவார்கள் அதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் குடும்பத்தினரை பாதையை பயன்படுத்த விடாமல் தடுத்து வருகிறார்கள் . இது குறித்து எங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லை. 
இதன் காரணமாக எங்கள் மூன்று குடும்பமும் நடந்து செல்லவும் மற்றும் சிறிய ரக வாகனம் செல்லவும் முடியாமல் மிகவும் பரிதவித்து வருகிறோம்.

4) ஆகையால் தயவுசெய்து வசதி உரிமைச் சட்டத்தின்படி எனது வீட்டிலிருந்து கிராமத்திற்கு செல்வதற்கு நடைபாதையை மேற்காணும் எதிர்மனுதார்களிடமிருந்து பெற்றுத்தந்து நீதியின் நோக்கம் நிறைவேற ஆவண செய்ய வேணுமாய் மிகவும் பணிவோடு வேண்டுகிறேன்.

இச் சொத்தின் நான்குமால் விபரம் :
கிழக்கு ; ..............................சாலை
வடக்கு ; 1) வது எதிர் மனுதார் இல்லம்
மேற்கு : 2) வது எதிர் மனுதாற்கு சொந்தமான நிலம்
 தெற்கு : 3) வது எதிர் மனுதார் இல்லம்
                                                                                          மனுதார்

 நாள் :................................
இடம் :................................

 இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 70 வது பிரிவுப்படி இதையே பிரமாணமாக இதில்............................................ தேதியன்று என்னால் கையொப்பம் செய்யப்படுகிறது

Comments