Crpc sec 256(1) - தனிநபர் புகார் - பிரிவு 200 - நீதிமன்றத்தில் நேரிடையாக கு. வி. மு. ச பிரிவு 200ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்
Crpc sec 256(1) - தனிநபர் புகார் - பிரிவு 200 - நீதிமன்றத்தில் நேரிடையாக கு. வி. மு. ச பிரிவு 200ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், புகார்தாரர் வழக்கு விசாரணை தேதியன்று ஆஜராகவில்லை என்று காரணம் கூறி நீதித்துறை நடுவர் தனிநபர் வழக்கை தள்ளுபடி செய்யும் போது மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையாகவும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். கு. வி. மு. ச பிரிவு 256ஐ பயன்படுத்தி தள்ளுபடி செய்வதற்கு முன்பாக நீதித்துறை நடுவர் இரண்டு விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். 1) - வழக்கை ஒத்திவைக்க முடிந்தால் அந்த வழக்கினை ஒத்தி வைக்க வேண்டும். 2) - ஒரு குற்றவியல் நடுவர், அன்றைய தினம் அந்த வழக்கில் ஆஜராக தேவையில்லை என்று கருதுவாரானால் புகார்தாரர் நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கலாம். உச்சநீதிமன்றம் (1998-1-CCR-82-SC) என்ற வழக்கில் பழைய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 247ல் கூறப்பட்டுள்ள நடைமுறை தற்போது பிரிவு 256ல் கூறப்பட்டுள்ளது. அந்த பிரிவானது புகார்தாரர் நீதிமன்றத்தில் ஒரு புகாரினை அளித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வராமல் வேண்டுமென்றே வழக்கை காலதாமதப்படுத்தும் நோக்கத்தில் நடந்து கொண்டார் என்றால் அவருடைய செய்கையை கட்டுப்படுத்துவதற்காக உள்ள பிரிவாகும். ஒரு வழக்கில் எதிரி ஆஜராகி வரும் நிலையில் புகார்தாரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து எதிரிக்கு தொல்லை கொடுத்து வரும் நிலையில், எதிரியை பாதுகாக்க மட்டுமே கு. வி. மு. ச பிரிவு 256(1)ஐ பயன்படுத்த முடியும். ஆனால் எவ்வித காரணமும் இன்றி தனிநபர் புகார் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யக்கூடாது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே "பீல்டு ஸ்பின்னர்ஸ் Vs ராமன் (2001-C2-MWN-CRL) என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது. அதேபோல் S. RAVI CHANDRAN VS PANDIYAN (2003-1-LW-CRL-273) என்ற வழக்கிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தனிநபர் புகார் வழக்கை, புகார்தாரரின் வருகையின்மைக்காக தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கும் குற்றவியல் நடுவர் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. A. NO - 670/2008, Srinithi mobile financial service Reb. By. P. Malaiappan Vs Sangeetha Citizen Motors
Comments
Post a Comment