Crpc - sec 468,470, 473 - ஒருவர் மீதுள்ள வழக்கை Crpc sec 468ல் கூறப்பட்டுள்ள காலவரையறை கடந்து (Beyond Limitation) நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளகூடாது.

Crpc - sec 468,470, 473 - ஒருவர் மீதுள்ள வழக்கை Crpc sec 468ல் கூறப்பட்டுள்ள காலவரையறை கடந்து (Beyond Limitation) நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளகூடாது. அவ்வாறு காலவரையறை கடந்து நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் அதற்கான காரணத்தை நடுவர் Crpc sec 473ன் படி குறிப்பிட வேண்டும். ஒருவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 3 ஆண்டுகளுக்கு மிகாத சிறை தண்டனை விதிக்ககூடிய சட்டப் பிரிவுகளாக இருக்கும் வழக்கில் சம்பவம் நடந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க வேண்டும். அதேபோல் Final Reportஐ காலதாமதமாக தாக்கல் செய்ய அரசு தரப்பில் Crpc sec 470ன் கீழ் மனுதாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மிகாத தண்டனை அளிக்க கூடிய வழக்குகளில் 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்ய வேண்டும். காலவரையறை கடந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் எதிரியை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRP. NO - 1286/2013, DT - 12.11.2013,V. Prakash Vs Inspector of police, Kalavakkam P. S, Kanjipuram District (2014-1-LW-CRL-577)

Comments