எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு (ex-party) என்றால் என்ன?
ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது பிரதிவாதியோ, பிரதிவாதியின் வழக்கறிஞரோ குறிப்பிட்ட வாய்தாத் தேதியில் ஆஜராகத் தவறினால், வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும்.
அப்போது பிரதிவாதியை நீதிமன்றத்தில் அழைத்து அவர் ஆஜராகாத போது வாதி கோரியபடி தீர்ப்பளிக்கப்படும்.
அதனை ஒரு தலைப்பட்த் தீர்ப்பு எனத் தமிழிலும் எக்ஸ்பார்ட்டி (Ex-parte) தீர்ப்பு என ஆங்கிலத்திலும் கூறுவார்கள்.
அப்படி வழங்கப்பட்ட ஒரு தலைப்பட்ச தீர்ப்பினை உரிய காரணங்கள் அடிப்படையில் ரத்து செய்ய ஒரு மனுவைத் தாக்கல் செய்ய சட்டத்தில் வழி வகையுள்ளது.
Comments
Post a Comment