HOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்.

HOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்.
.....................................
*கீழே குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகை தற்ப்பொழுது* *நடைமுறையில் உள்ளபடி *மாறுபடும்*
.......................................

*1. உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது / பிரிவு 180. ரூ.50 அபராதம்*

*2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் பிரிவு 181. ரூ.500 அபராதம்*

*3. உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் பிரிவு 182(1). ரூ.500 அபராதம்*

*4. அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் பிரிவு 183(1) ரூ.400 அபராதம்*

*5. மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல். முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) பிரிவு 183(2).ரூ.300 அபராதம்*

*6. அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184. ரூ.1000 அபராதம் மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177.ரூ.100 அபராதம்*

*7. போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் பிரிவு 201 .ரூ.50 அபராதம்*

*8. மன நிலை, உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .பிரிவு 186. ரூ.200 அபராதம்*

*9. போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் பிரிவு 189. ரூ 500 அபராதம்*

*10. அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது பிரிவு 190(2) .ரூ.50 அபராதம்*

*11. அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் பிரிவு 190(2).ரூ.50 அபராதம் .*

*12. காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் பிரிவு 190 (2) .ரூ.50 அபராதம்*

*13. பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் பிரிவு 192. ரூ.500 அபராதம்*

*14. அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் பிரிவு 194.ரூ.100 அபராதம்*

*15. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) பிரிவு 196 .ரூ.1000 அபராதம்*

*16. வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் பிரிவு 198 .ரூ.100 அபராதம்*

Comments