மாற்றுமுறை ஆவணச் சட்டம் (#Negotiable_Instruments_Act, 1881) பிரிவு 138 ன் ( sec 142) கீழான குற்றச் செயலுக்கு கீழ்க்கண்ட காரணிகள் அமைந்திருக்க வேண்டும்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் (#Negotiable_Instruments_Act, 1881) பிரிவு 138 ன் ( sec 142) கீழான குற்றச் செயலுக்கு கீழ்க்கண்ட காரணிகள் அமைந்திருக்க வேண்டும்.
1. ஒருவர், அவரது வங்கியில் வைத்துள்ள கணக்கிலிருந்து ஒரு காசோலையை மற்றொரு நபருக்கு ஒரு தொகையை குறிப்பிட்டு வழங்கியிருக்க வேண்டும்.
2. அந்த #காசோலை ஒரு கடன் அல்லது கடப்பாட்டை முழுமையாக தீர்ப்பதற்கு அல்லது அதன் ஒரு பகுதியை தீர்ப்பதற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
3. அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அல்லது அந்த காசோலை செல்லுபடியாகும் காலத்திற்குள் வங்கியில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
4. அந்த காசோலையானது காசோலை கொடுத்தவரின் வங்கிக் கணக்கில் போதிய பணமில்லை என்கிற காரணத்தால் அல்லது வங்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அதிகப்படியான தொகை காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிற காரணத்தால் திரும்ப பெற்றிருக்க வேண்டும்.
5. காசோலையை பெற்றவர் அல்லது காசோலையை முறைப்படி பெற்றவர், அந்த காசோலை திருப்பப்பட்டதற்கு பின்னர், அந்தக் காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகையை தனக்குத் தருமாறு கோரி எழுத்து மூலமான ஓர் அறிவிப்பினை காசோலை கொடுத்தவருக்கு அந்த காசோலை திருப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை பெற்றவர் அல்லது முறைப்படி பெற்று வைத்திருப்பவர் அனுப்ப வேண்டும்.
6. அந்த அறிவிப்பினை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் காசோலையில் குறிப்பிட்டிருந்த தொகையை காசோலை கொடுத்தவர் திருப்பிச் செலுத்த தவறியிருக்க வேண்டும்.
மேற்கண்ட காரணிகள் ஒரு வழக்கில் இருந்தால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை தண்டிக்கலாம் என உச்சநீதிமன்றம் "ஜூக்கேஷ் சேகல் Vs சம்சீர் சிங் கோகி" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.
Comments
Post a Comment