PM HOUSE உங்களது ஊராட்சியில் இதுவரை யார் யார் மத்திய அரசின் வீடுத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் பட்டியல் மற்றும் அவர்களது புகைப்படம் முதல் அவர்களுக்கு எப்போது பணம் வங்கியில் வந்தது என்ற விவரம் அறிந்து கொள்ளலாம்.
உங்களது ஊராட்சியில் இதுவரை யார் யார் மத்திய அரசின் வீடுத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் பட்டியல் மற்றும் அவர்களது புகைப்படம் முதல் அவர்களுக்கு எப்போது பணம் வங்கியில் வந்தது என்ற விவரம் அறிந்து கொள்ளலாம்.
அதற்கு https://rhreporting.nic.in/netiay/PhysicalProgressReport/physicalprogressreportPhaseWise.aspx லிங்க்ல் உங்கள் மாவட்டம்,ஊர் ஆகியவைகளை பதிவு செய்து உங்கள் ஊராட்சியில் யார் யாருக்கு வீடுகள் வழங்கப்பட்டது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
பின்னர் https://rhreporting.nic.in/netiay/benificiary.aspx
லிங்க்கில் முதல் லிங்கில் உள்ள பயனாளர்களின் விவரங்களில் உங்களுக்கு தேவையான பயனாளியின் REG.NO எடுத்து பதிவு செய்தால் பயனாளர்களின் புகைப்படம்,வங்கி பரிவர்தனை ஆகியவை தெரியவரும்.
Link :1
https://rhreporting.nic.in/netiay/PhysicalProgressReport/physicalprogressreportPhaseWise.aspx
Link:2
https://rhreporting.nic.in/netiay/benificiary.aspx
இன்றைய தகவல் கடிதங்கள்
வீடு கட்டும் திட்ட ஊழல் கண்டுபிடிக்க வழிகள்
உங்கள் ஊரில் மத்திய அரசு மாநில அரசு திட்டங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது
உங்கள் ஊரில் உள்ள பயனாளிகளை ஆய்வு செய்யுங்கள்
1. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல வீடுகள் வழங்கபட்டு இருக்கும்
2. ஏற்கனவே தார்சு வீடு உள்ளவருக்கு வீடுகள் வழங்கபட்டு இருக்கும்
3. வீட்டின் உரிமையாளர் பெயரில் இல்லாமல் சம்பந்தமே இல்லாதவர்கள் பேரில் பணம் வழங்கப்பட்டு இருக்கிறது
4. பட்டா இல்லாத பயனாளிக்கு வீடுகள் வழங்கபட்டு இருக்கும்
5. அரசு வேலைகளில் இருப்பவர்கள் வசதியானவர்களுக்கு வீடுகள் வழங்கபட்டு இருக்கும்
6. வீடு கட்ட பணம் பெற்றுக் கொண்டார் ஒருவராக இருப்பார் ஆனால் வேறு ஒருவர் வீடு கட்டி இருப்பார்
7 கட்டப்படாத வீட்டுக்கு பணம் வழங்கப்பட்டிருக்கும்
8 ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டிற்கு மீண்டும் மீண்டும் உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கும்
9 இறந்துபோனவர்க்கு ஊரில் இல்லாதவர்களுக்கு கற்பனையா நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டிருக்கும்
10 மீனவர் அல்லாத நபர்கள் மீனவர் உலக காட்டப்பட்டு பணம் வழங்கப்பட்டு இருக்கும்
11 SC அல்லாதவர்கள் சாதி மாற்றி SC என காட்டப்பட்டு பணம் வழங்கப்பட்டு இருக்கும்
12 வீடு வழங்கும் திட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இல்லாத வசதியான நபர்களுக்கு அந்த கிராமத்தை சாராத வேறு ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு இருக்கும்
13. வீடு கட்டப்பட்டு விட்டதாக அரசு ஆவணங்களில் இருக்கும் ஆனால் பயனாளி குடிசை வீட்டில் பழைய வீட்டில் குடியிருப்பார்
சட்டபடி போராடுவோம்
சட்ட ஆயுதம் ஏந்துவோம்
Comments
Post a Comment