காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கி அப்புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அல்லது நடவடிக்கையில் திருப்தி அளிக்காத போது மேல் முறையீடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மனு மாதிரி
மனுதார்:
பெறுநர்:
திரு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,
...............
.................... மாவட்டம்.
மதிப்பு மிகுந்த அய்யா,
பொருள் :
கு.வி.மு.ச. 1973 இன் 154(3) வது பிரிவு படி மேல் முறையீட்டு விண்ணப்பம் பணிந்தனுப்பபடுகிறது.
பார்வை:
காவல் ஆய்வாளர், சீர்மிகு காவல் நிலையம்,
............................
.......................... மாவட்டம் . மனு நாள் :..................
1.மனுதாராகிய நான் பார்வையில் காணும் புகார் மனுவை கடந்த......... . தேதியில் .................. காவல் நிலையத்தில் நேரில் / பதிவஞ்சல் மூலம் வழங்கியுள்ளேன். மேற்கண்ட எனது புகார் மனு மீது மேற்காணும் காவல் நிலையத்தினர் நாளது தேதி வரை எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
2. தமிழ்நாடு அரசாணை நிலை எண் 73 / 2018 நாள் : 11 - 06-2018 இல் பொதுமக்களின் குறை தீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது -
தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் அத்தியாயம் 22 இல் பத்தி 167 பிரிவு (ii) க்கு திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மனுக்களை பெற்றுக் கொண்ட 3 தினங்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்றும்
மனுவைப் பெற்றுக் கொண்ட 30 தினங்களுக்குள் குறை தீர்க்கப்பட வேண்டும் என்றும்
மனுதார் அம் மனு தொடர்பாக அலுவலகத்திற்கு நேரில் வந்து கேட்கும் போது அம்மனு மீது எடுக்கப்பட்டக நடவடிக்கை குறித்து விபரம் தெரிவித்தல் வேண்டும் என்றும்
ஏதேனும் காரணங்களுக்காக மனுவை இறுதி செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்றால் அது குறித்து மனு தாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும்
மனுதாரின் கோரிக்கையை ஏற்க இயலாத நிகழ்வில் அதற்குரிய காரணத்துடன் கூடிய பதிவை சம்பந்தப்பட்ட மனு தாருக்கு 30 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும்
தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை இயற்றியுள்ளது.
3.மேலும் காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும் தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது.
4.மேலும் ஒரு கோரிக்கை விண்ணப்பம் / புகார் மனு மீது மனுச் செய்த' 1 மாத காலங்களுக்குள் நிறைவேற்றுகை செய்யப்பட்டு மனுதாருக்கு தகுந்த பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை, உயர் நீதிமன்றம், வழக்கு எண்:W. P.No.20452 of 2014 தீர்ப்புரை நாள்: 01.08.2014 வழக்கில் ஒரு மகத்தான தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது. மேற்காணும் தீர்ப்புரையானது மனு தாராகிய எனது இவ்வழக்குக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் - 1950 இன் 14வது பிரிவு படி பொருந்தும் என மனு தாராகிய என்னால் கருதப்படுகிறது. மேலும் பார்வையில் காணும் எனது புகார் மனுவில் கண்டுள்ள எதிர்மனுதாரருக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக..... ........................... காவல் நிலையத்தினர் செயலாற்றி வருகின்றனர். இதன் காரணங்களால் மனு தாராகிய நான் அநேக மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன்.
5. ஆகையால் தயவு செய்து கு.வி.மு.ச. 1973 இன் 154(3) வது பிரிவு படி இம்மனுவையே மேல் முறையீடாக ஏற்றுக் கொண்டு தங்களின் யுக்திக்கு ஏற்றவாறு பார்வையில் காணும் எனது புகார் மனு மீது நேர்மையான விசாரணை மேற்கொண்டு மனுதாரரின் நீதியின் நோக்கம் நிறைவேற ஆவண செய்ய வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.
மனுதார்
தேதி :
இடம்:
இம்மனுவையே பிரமாணமாக இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதில்............ ......... தேதியன்று என்னால் கையொப்பம் செய்யப்படுகிறது.
Comments
Post a Comment