police theft complaint எனது வீட்டுச் சாவியையும் இரு சக்கர வாகனத்தையும் திருடிச் சென்ற குண்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை மீட்டு தர கேட்டு
அனுப்புனர்
எதிரி:-
*திரு.
பொருள் :- எனது வீட்டுச் சாவியையும் இரு சக்கர வாகனத்தையும் திருடிச் சென்ற குண்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை மீட்டு தர கேட்டு
ஐயா :-
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.
11-09-2021 அன்று எனது வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எனது இருசக்கர வாகனத்தினை திடீரென காணவில்லை.
( NO- TN-75-AS 1406 )
( Model:TVS Radeon 110 ES MAG BSVI )
அதில் எனது வீட்டின் சாவி முன்பக்க காம்பவுண்ட் கேட் சாவி ஆகியவையும் இரு சக்கர வாகனத்தின் ஆவணங்களும் இருந்தது அவைகளையும் காணவில்லை
எனவே எனது வண்டியை பல இடங்களிலும் தேடி அலைந்தேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை
பின்னர் விசாரித்தபோது எதிரியின் தூண்டுதலின் பேரில் பைனான்ஸ் கம்பெனியின் குண்டர்கள் எனது வீட்டின் சாவியையும் இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்றது தெரிய வந்தது
எதிரிகள் எனது வீட்டின் சாவியை திருடி சென்றதால் அன்றைய தினம் எனது வீட்டிற்குள் செல்ல இயலாமல் நானும் உடல் நலமில்லாத எனது மனைவியும் வீட்டின் வராண்டாவிலேயே விரிப்புகள் போர்வைகள் தலையணைகள் எதுவும் இல்லாமல் வெறும் தரையிலேயே படுத்து தூங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன் ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம்
மேலும் நான் இருசக்கர வாகனத்தில் வைத்து ஊர் ஊராக சென்று மீன் விற்கும் தொழில் செய்து வருகிறேன்
எதிரிகள் எனது வண்டியை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதால் சுமார் இரண்டு மாதங்களாக என்னால் தொழிலுக்கு செல்ல முடியவில்லை இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 800 வீதம் சுமார் 25 ஆயிரம் அளவுக்கு எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது
இதனால் வீட்டுச் செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் திண்டாடி வருகிறேன்
எதிரிகள் எனது வீட்டு சாவியை எடுத்துச் சென்ற மறு நள் எனது மனைவியின் அக்காவின் வீட்டுக்கு சென்று
அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றொரு சாவியை பயன்படுத்தி தற்போது எனது வீட்டில் வசித்து வருகிறேன்
மேலும் எதிரிகளின் வசம் எனது வீட்டின் இன்னொரு செட் சாவி இருப்பதால் நிம்மதியாக தூங்க முடியவில்லை
எப்போது யார் வீட்டுக்குள் புகுந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறேன்
எனவே நீதிமன்ற உத்தரவின்படி அல்லாமல் சட்டவிரோதமாக எனது வீட்டுச் சாவியையும் இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்று எனக்கு மன உளைச்சலையும் பொருளாதார இழப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள மேற்கண்ட பைனான்ஸ் கம்பெனியின் மேனேஜர் மீதும் குண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
14 -10-2021
Comments
Post a Comment