RTI 63 (3) Village

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) மற்றும் 6(3) மற்றும் (1)ன் கீழ் பதிவு அஞ்சல் உடன் தகவல் வேண்டி மனு.
அனுப்புனர் ,
     
பெறுநர் ,
    பொது தகவல் அலுவலுர் அவர்கள் ,
    தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ,
      வட்டாட்சியர் அலுவலகம் ,
        தாலுகா ,
        மாவட்டம்
பொருள்:  தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) ன் கீழ் மற்றும் பிரிவு 7(1) ன் படி  காலகெடுவுக்குள் தகவல்  வழங்க வேண்டி விண்ணப்பம்
அய்யா வணக்கம் ,
           நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் .நான்  இந்திய குடிமகன் ஆவேன் .நான் கோரும் தகவல் எனக்கு அறிந்தவரை தங்கள்  அலுவலகத்தில் பரமரிக்கபடுகிறது என்பதை அறிவேன்
1- கிராமத்தில் எத்தனை கிராமநிர்வாக அதிகாரி(vao ) மற்றும்  தலையாரி  பணிபுரிகின்றனர்  ,அவர்களின்  பெயர்  மற்றும் அவசர கால பொதுமக்கள் தொடர்புகொள்ள  கைபேசி எண் (அரசால் அனுமதிக்கப்பட்ட )   ஆகியவற்றை  தகவலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 
2-   கிராம அலுவலகத்தில்  தினக்கூலி அடிப்படையில்  பணியமர்த்தப்பட்டுள்னரா ,அவ்வாறு  பணியமர்த்தப்பட்டுலனர்  எனில்   எவ்வளவு  பேர் பணியமர்த்தப்பட்டுலனர் அவருடைய முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை  தகவலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
3- அலுவலகத்தில் அரசு கோப்புகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிவர் தவிர மற்றவர்கள் நிர்வகிக்க அனுமதி இருப்பின் அதற்கான அனுமதி கடிதத்தின் நகல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
4-  அரசால் அனுமதிக்காத நபரால் கோப்புகள் கையாளப்பட்டால்  அந்நபர் மீது புகார்  கொடுப்பதற்கு யாரை அணுக வேண்டும் .அவர்களின் முகவரி  தகவலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
5-அரசால் அனுமதிக்காத நபரால் கோப்புகள் கையாளப்பட்டால்  அந்நிகழ்வை வீடியோ , போட்டோ  எடுப்பதற்கு  அனுமதி கடிதம்  வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 7 உட்பிரிவு 8-ன் கீழ்  நான் கோரும் தகவல் நிராகரிக்க பட்டால் அதற்குரிய காரணம் மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலரின் முழு முகவரி தர வேண்டுகிறேன் . 
  இந்த வின்னபத்திற்கு கட்டணமாக RTI act-2005-ன் படி கட்டண விதி 3-ன் கீழ் ரூபாய் 10-மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டி உள்ளேன் .
 மேலும் கட்டணம் தேவைப்படும் பட்சத்தில் அரசு விதிமுறைகளின் படி உரிய கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளேன் .
மேலும் மேற்படி ஆவணங்கள்  நகலுக்கான  செலவுத்தொகை தேவைப்படும் பட்சத்தில் எங்கே எப்படி செலுத்த வேண்டும் என்று தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நாள்:
இடம்:                                                                                           இப்படிக்கு

Comments