RTI ACT VILLAGE VAO OFFICE INFO

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) மற்றும் 6(3) மற்றும் (1)ன் கீழ் பதிவு அஞ்சல் உடன் தகவல் வேண்டி மனு.
அனுப்புனர் ,
     செந்தில்குமார் .சோ .பெ 
                      2/99 அ சன்னதி தெரு 
         நாகலாபுரம் 
         துறையூர் தாலுகா ,
         திருச்சி மாவட்டம் .
பெறுநர் ,
               பொது தகவல்அலுவலர் அவர்கள் ,
               தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ,
                வட்டாட்சியர் அலுவலகம் ,
                
பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) ன் கீழ் மற்றும் பிரிவு 7(1) ன் படி காலகெடுவுக்குள் தகவல் வழங்க வேண்டி விண்ணப்பம்
அய்யா வணக்கம் ,
           நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் .நான் இந்திய குடிமகன் ஆவேன் .நான் கோரும் தகவல் எனக்கு அறிந்தவரை தங்கள் அலுவலகத்தில் பரமரிக்கபடுகிறது என்பதை அறிவேன்
1- கிராமத்தில் எத்தனை கிராமநிர்வாக அலுவலர் (vao ) மற்றும் உதவியாளர் பணிபுரிகின்றனர் ,அவர்களின் பெயர் மற்றும் அவசர கால பொதுமக்கள் தொடர்புகொள்ள கைபேசி எண் (அரசால் அனுமதிக்கப்பட்ட ) ஆகியவற்றை தகவலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 
2-  கிராம அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனரா ,அவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனில் எவ்வளவு பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் அவருடைய முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை தகவலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
3- கிராமநிர்வாக அலுவலகத்தில் அரசு கோப்புகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிவர் தவிர மற்றவர்கள் நிர்வகிக்க அனுமதி இருப்பின் அதற்கான அரசாணை (G.O)அனுமதி கடிதத்தின் நகல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
4- அரசால் அனுமதிக்காத நபரால் கோப்புகள் கையாளப்பட்டால் அந்நபர் மீது புகார் கொடுப்பதற்கு யாரை அணுக வேண்டும் .அவர்களின் முகவரி தகவலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
5- அரசால் அனுமதிக்காத நபரால் கோப்புகள் கையாளப்பட்டால் அந்நிகழ்வை வீடியோ , போட்டோ எடுப்பதற்கு அனுமதி கடிதம் தகவலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
6- கிராம நத்தம் 299-5 299-6 சர்வே எண் பட்டா நகல் தகவலாக தர வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 7 உட்பிரிவு 8-ன் கீழ் நான் கோரும் தகவல் நிராகரிக்க பட்டால் அதற்குரிய காரணம் மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலரின் முழு முகவரி தர வேண்டுகிறேன் . 
  இந்த வின்னபத்திற்கு கட்டணமாக RTI act-2005-ன் படி கட்டண விதி 3-ன் கீழ் ரூபாய் 10-மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டி உள்ளேன் .
 மேலும் கட்டணம் தேவைப்படும் பட்சத்தில் அரசு விதிமுறைகளின் படி உரிய கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளேன் .
மேலும் மேற்படி ஆவணங்கள் நகலுக்கான செலவுத்தொகை தேவைப்படும் பட்சத்தில் எங்கே எப்படி செலுத்த வேண்டும் என்று தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நாள்: 
இடம்: இப்படிக்கு

Comments