RTI NEW ROAD WORK

வணக்கம்,1.புளியங்குடி நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில்( நிதியாண்டு 2018 முதல் 2021 ) புதிதாக சாலைகள் அமைக்கப்படும் மட்டும் அமைக்கப்பட்ட தெரு விவரங்களை தகவலாக தரவும்.
2. புதிதாக அமைக்கப்படும் சாலைகளில் ஆயுட்காலம் குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் என்பதை தகவலாக தரவும்.
3. புதியதாக அமைக்கப்படும் சாலைகளின் இருபுறமும் அமைக்கப்படும் கழிவு நீர் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் நீளம் மற்றும் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தகவலாக தரவும்.
4. புளியங்குடி நகராட்சி காந்தி பஜார் சாலையில் அமைக்கப்படும் தார் சாலையின் நீளம் மற்றும் அகலம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது, பழைய சாலையிலிருந்து என்பதை தகவல் தகவலாக தரவும்.
5. புளியங்குடி நகராட்சியில் புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் தரம் ஆய்வு செய்து சான்றளிக்கும் அதிகாரியின் பெயர், பதவி, முகவரி ஆகியவற்றை தகவல் தரவும்.
6. புளியங்குடி நகராட்சி காந்தி பஜார் சாலையில் அமைக்கப்படும் சாலையின் தரத்தினை ஆய்வு செய்ய samples தரவும்.
7. புளியங்குடி நகராட்சியில் அமைக்கப்படும் சாலை எந்த மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்படுகிறது கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் (நிதி ஆண்டு 2018 முதல் 2021 ).
8. புளியங்குடி நகராட்சி உள்ள சிதம்பர விநாயகர் கோவில் தெரு பழைய மார்க்கெட் கீழ் புறம் கடைசியாக எப்போது சாலை அமைக்கப்பட்டது என்பதை தகவலாக தரவும்.
9. மேற்சொன்ன கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் புளியங்குடி நகராட்சியில் சாலை பணியினை ஒப்பந்தத்தில் எடுத்த ஒப்பந்ததாரர் பெயர், முகவரி விவரம் மற்றும் விலைப்பட்டியலை தகவல் ஆதரவும்.
10. மேற்கண்ட கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை பணிக்காக ஒப்பந்தம் கோர செலவிடப்பட்ட செலவினங்களின் விவரங்களை மற்றும் தொகையை தகவலாக தரவும்.

Comments