RTI POLICE DEPT

பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன்
                      தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் பிரிவு எண் 6(1)விண்ணப்பம்                                      
                                  
 அனுப்புனர் :

பெறுனர் :
பொதுத் தகவல் அலுவலர்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,

      பார்வை : 1) ###₹₹## மாவட்டம் ##₹₹### காவல் நிலையத்தில் மனு எண் விசாரணை குறித்து சில தகவல் வழங்க கேட்டல் சார்பு .
1) மேற்காணூம் புகாரின் அடிப்படையில் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் ஒளி நகல்களை வழங்க வேண்டுகிறேன்.
2) மேற்காணூம் புகாரின் மீது மனுதாரர்களையும் , அப்புகார்களுக்குட்பட்ட எதிரிகளையும், விசாரித்த தேதிகள், மற்றும் அந்த தேதிகளின் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தின் பொது நாட்குறிப்பின் ஒளி நகல்களை வழங்க வேண்டுகிறேன். 
3) மேற்காண புகாரின் மீது சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் மற்றும் தங்கள் அலுவலகத்தில் எந்த கோப்பில் கையாளப்பட்டதோ அந்த காவல் நிலையத்தின் மற்றும் தங்கள் அலுவலக கோப்புகளின் மேலூறை உட்பட அனைத்து பக்கங்களின் ஒளி நகல்களை வழங்க வேண்டுகிறேன்.
  4) மேற்காணூம் புகாரின் விசாரணையில் எதிரிகள் சமர்பித்த ஆவணங்களின் ஒளி நகல்களை வழங்க வேண்டுகிறேன்.
5) மனுதாரர், எதிர் மனுதாரர்கள் அளித்த எழுத்து பூர்வமான வாக்கு மூலங்களின் ஒளி நகல்களை வழங்க வேண்டுகிறேன்.
மேற்காணூம் ஆவணங்கள், மற்றும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவுகள் 8 மற்றும் 9இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ள விடங்களுக்கு உட்பட்டதல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றன.

                


 இடம்: 
 தேதி:

Comments