தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2 (J) கள ஆய்வு மனு...!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2 (J) கள ஆய்வு மனு...!

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6 (1)-ன் கீழ் மனு.
ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்.

அனுப்புநர் :-

XXXXXXXXXXXX
XXXXXXXXXX
XXXXXXXX
XXXXXX

பெறுநர் :-

பொது தகவல் அலுவலர்
XXXXXXXXXX
XXXXXXXX
XXXXXX

பொருள் :-

த அ உ ச - 2005-ன் கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்களை சான்றிட்டு வழங்க வேண்டு கின்றேன்.

த அ உ ச - 2005 , பிரிவு 2 (J)-ன் கீழ் ஆய்வு செய்து நகல் எடுக்க அனுமதி வேண்டுதல் சார்பாக.

பார்வை :-

----------------------------------கோப்புகளை ஆய்வு செய்து நகலெடுத்தல்.

ஐயா , அம்மா வணக்கம்....

மேற்படி பார்வையில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக , தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 2 (J)-ன் கீழ் ஆய்வு செய்வதற்கு கட்டணமாக ரூ.10 மதிப்புடைய நீதிமன்ற வில்லை இணைத்துள்ளேன்.

1. ஆகவே இம்மனுவை ஏற்றுக்கொண்டு , மேற்சொன்ன பார்வை- 1, 2-ல் சொன்ன அறிவிப்பில் தொடர்புடைய கோப்பின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து, தேவைப்படும் ஆவணங்களை எனது சொந்த செலவில் நகலெடுத்து, அதனை தாங்களின் அலுவலக முத்திரை மற்றும் சான்றொப்பமிட்டு வழங்க வேண்டுகிறேன்.

2. மேற்படி ஆய்வு தொடர்பாக தங்களுக்கு மாற்று கருத்து / ஆய்வு நாள் மாற்றம் செய்வது குறித்து ஏதேனும் தெரிவிப்பதாக இருப்பின் அதனை, மேற்படி நான் கோரிய ஆய்வு நாட்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்னராக தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

3. தங்களிடமிருந்து பதில் கடிதம் ஏதும் வரவில்லை என்றால் தாங்கள் ஆய்வுக்கு சம்மதம் தெரிவித்ததாக பொருள் கொள்ளப்படும்.

4. மேற்படி விண்ணப்பம் மறுக்கப்பட்டாலோ / நிராகரிக்கப்பட்டாலோ, மனுதாரர் ஆகிய எனது உரிமை மறுக்கப்படுகிறது /தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, சட்டப்பிரிவு 2 (J)-யினை தங்கள் ஏற்கவில்லை என பொருள் கொண்டு, உரிய நிவாரணம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக கருதுகிறேன்.

5. ஆய்வின்போது என்னுடன் இரு நபரை வைத்துக்கொள்ள அனுமதி மற்றும் எங்கள் கைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

மனுதாரர் கள ஆய்வு செய்ய வரும் போது வீடியோ எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது (CIC/WB/A/2006/00144). அதன் படி கள ஆய்வு செய்ய வரும் போது வீடியோ எடுத்துக் கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

இப்படிக்கு.

நன்றி....!

Comments