2J தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 இன் பிரிவு 2(J) இன் கீழ் கள ஆய்வு மனு.நாள்:__________,ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல்

தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 இன் பிரிவு 2(J) இன் கீழ் கள ஆய்வு மனு.
நாள்:__________,
ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல்

அனுப்புநர்:
____________
த/பெ________
______

பெருநர்:
திரு.பொதுத்தகவல் அலுவலர் அவர்கள்,


பொருள்:
பட்டா மாற்றம் தொடர்பான கோப்பு ஆவணங்களை,தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 இன் பிரிவு 2(J) இன் கீழ் கள ஆய்வு செய்வது தொடர்பு.

அய்யா வணக்கம்.
1.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம்,பிளாக்குறிச்சி வருவாய் கிராமம்,வீராக்கண் உட்கடை கிராமம்,சர்வே எண்:____இல் ____ ஏர்ஸ்___ செண்டு உடைய சொத்தின் உரிமையாளர் நான் ஆவேன்.
தற்போது,இந்தச் சொத்தின் பட்டா-சிட்டாவில் முறைகேடாக திரு._________
த/பெ_________பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படியார் திரு.________என்பவர் பெயரில் பட்டா மாறுதல் செய்வதற்கு,அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அடங்கிய கோப்பு மற்றும் அது சார்ந்த ஆவணங்களை, வருகின்ற 24/11/2021 புதன்கிழமை அல்லது 25/11/2021 வியாழக்கிழமை அல்லது 26/11/2021 வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை, எது தங்களுக்கு உகந்த தினமோ,அந்த நாளன்று கள ஆய்வு செய்திட அனுமதி வழங்க வேண்டுகிறேன்.
2.
மேலும் கள ஆய்வுக்கு உடன் ஒரு நபரை அழைத்து வரவும்,தேவைப்படும் ஆவணங்களின் நகல்களை சான்றிட்டு வழங்க வேண்டுமாயும் கேட்டுக்கொள்கிறேன்.மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்களில் ஒரு நாள் அல்லாது, வேறு நாள், தேதி, நேரத்தில் கள ஆய்விற்கு அனுமதி வழங்குவதாக இருந்தாலும் அவ்விபரத்தைக் குறிப்பிட்டு பதிவஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.மேற்குறிப்பிட்டுள்ள விபரங்களுக்கு தங்களிடமிருந்து எவ்வித பதிலும் 23/11/2021 ஆம் தேதிக்குள் கிடைக்கப்பெறவில்லையெனில், தாங்கள் கள ஆய்விற்கு அனுமதி வழங்கியதாகக் கருதி 24/11/2021 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கள ஆய்விற்காக தங்கள் முன் முன்னிலையாவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
3.
கள ஆய்வு நாளான 24/11/2021 தேதியன்று தாங்கள் விடுப்பு ஏதும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு விடுப்பு எடுத்துக் கொள்வதாக இருந்தால் மாற்று அலுவலராக, முதல் மேல்முறையீட்டு அலுவலரான வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் கள ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
__________
நாள்:
இடம்:

Comments