மூன்று வருடத்திற்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் மாற்றம் செய்ய கோருதல் தொடர்பான மாதிரி மனு.

மூன்று வருடத்திற்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் மாற்றம் செய்ய கோருதல் தொடர்பான மாதிரி மனு.
விடுநர் :-
***************************
***********************
***************
**********
பெறுநர் :-
மாவட்ட ஆட்சியர் அவர்கள்___________________மாவட்டம்
பொருள் :-
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் மாற்றம் செய்ய கோருதல் - சார்பாக.
ஐயா, அம்மா வணக்கம்....
____________மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருவதாலும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் ஊராட்சி செயலாளர்களும் புரிதல் இன்றிய நிலையில் உள்ளதாலும் பல்வேறு நிர்வாக பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும் சில ஊராட்சி செயலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊராட்சிகளில் தொடர்ந்து நீண்ட காலமாக பணிபுரிவதால் உறவுமுறை,அரசியல் நிலைப்பாடு போன்ற காரனிகளால் அரசின் பல்வேறு திட்டங்களில் ஊழல்,முறைகேடு நிகழவும் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் குழப்பம்,குந்தகம் எற்படவும் காரணமாகின்றன.
எனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை அரசாணை எண்.72 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் 09.07.2013ன் படி பணியிட மாறுதல் செய்திட மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களை கிராம மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்.

Comments