மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்
அரசாணை எண் - 127, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை (இ5), நாள் - 21.09.2015
முக்கியமான பணிகளை மற்றும் குறிப்பிட்டுள்ளேன்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் கிளர்க்களுக்கு உரிய கால இடைவெளியில் ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
கிராம ஊராட்சிகளின் பொது நிதி கணக்கு செலவின பட்டியல்களை சரிபார்க்க வேண்டும்.
ஊராட்சி மன்ற கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
கிராம சபை கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்து அதுகுறித்த அறிக்கையை உயர் அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சரியாக விநியோகிப்பதையும், முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சத்துணவு மையங்களை ஆய்வு செய்து, நல்ல தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஊராட்சிகளில் கட்டிட வரைபடம்/மனைப்பிரிவு அங்கீகாரம் அளித்தலில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
கிராம மக்களுடன் இணைந்து மக்கள் குறைதீர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பை அகற்ற ஊராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஊராட்சிகளை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம ஊராட்சி) அறிக்கை அனுப்ப வேண்டும்.
கிராம சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படுவதையும், பயன்படுத்தப்படுவதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
வரிகள் ஒழுங்காக வசூல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஊராட்சி பொது நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஊராட்சியின் பொது சொத்துக்களை கண்காணிக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளின் வரவு செலவு திட்டம் தயாரிக்க வழிகாட்ட வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டு அவைகளை வேகப்படுத்தவும், வழிகாட்டவும் உதவ வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டப் பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
பிரதம மந்திரி வீடு திட்டம், பசுமை வீடு திட்டம் ஆகியவற்றின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.
நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை கள ஆய்வு செய்வதுடன், பட்டியல்களை கூர்ந்தாய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் "ரோஜ்கார் திவாஸ்" அதாவது வேலைவாய்ப்பு தினம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் பதிவேடுகளை சரிபார்க்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கண்காணிக்க வேண்டும்.
இன்னும் நிறைய இருக்கு....
ஆனால் எழுத முடியல
ஆக எல்லாத்துக்கும் பொறுப்பு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்தான்.
Comments
Post a Comment