RTI ACT PANCHAYAT INFO தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6 (1),6(3) மற்றும்7(1)-ன் கீழ் தகவல் கோரி விண்ணப்பம்...ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6 (1),6(3) மற்றும்7(1)-ன் கீழ் தகவல் கோரி விண்ணப்பம்...ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்.
அனுப்புநர்,
பெயர் முகவரி....
பெறுநர்
திரு.பொது தகவல் அலுவலர் அவர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலகம்
____
____ மாவட்டம்
பொருள்....
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) கீழ் _கிராம ஊராட்சி சார்ந்து சில தகவல்கள் கோருவது சார்ந்தது.
1).........கிராம ஊராட்சியில் ஊதியம் பெரும் பணியாளர்களின் விவரம் அவர்களின் மாத ஊதியம் ரூபாய்போன்ற விபரங்களை தகவல்களாக வழங்குக.
2) மேற்படி......... கிராம பஞ்சாயத்தில் கடந்த.........ம் தேதி முதல்.........ம் தேதி வரையிலான காலத்தில் என்னென்ன விதமான சிவில் பணிகள் கட்டுமானங்கள் குழாய் இணைப்பு தெரு விளக்கு அமைத்தல் சாலை பாலம் அமைத்தல் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் கட்டிடங்கள் கட்டுதல் என நடைபெற்ற புதிய மற்றும் பழுது பார்ப்பு பணிகள்....
(அ) பணிகள் ஒவ்வொன்றின் பெயர்கள்.
ஆ) திட்ட மதிப்பீடு.
இ) பணி ஆரம்பிக்கப்பட்ட தேதி.
ஈ) பணி முடிக்கப்பட்ட தேதி.
உ) ஒவ்வொரு பணிக்கும் அளிக்கப்பட்ட காசோலைகளின் என்..தேதி...தொகை.
ஊ) ஒவ்வொரு பணியும் செய்து முடித்த ஒப்பந்ததாரர் பெயர் வயது அவரின் முந்தைய தற்போதைய முழு முகவரி.
எ) பணிகள் முடிக்கப்பட்டது என்று அளவு புத்தகம் (M . Book) நகல் ஆகிய தகவல்களை அளிக்க வேண்டுகிறேன்
ஏ)ஒவ்வொரு பணியும் செய்து முடிக்கப்பட்டது என்று ஒப்புதல் வழங்கிய பணி நிறைவேற்று அதிகாரியின் முந்தைய, தற்போதைய அலுவலக முகவரி பதவியின் விவரம்,கைப்பேசி எண் தகவல்களாக வழங்குக.
3) கடந்த...........ம் தேதி முதல்......ம் தேதி வரையிலான காலத்தில் என்னென்ன விதமான செலவுகள் மேற்படி......
... கிராம பஞ்சாயத்தில் அந்த செலவுகள் ஒவ்வொன்றிற்கும் உள்ள (paid voucher)செலவு சீட்டுகளின் அனைத்து நகலையும் உரிய அலுவலரால் சான்றொப்பம் இட்டு அளிக்க வேண்டுகிறேன்.
4) மேற்படி........... கிராம பஞ்சாயத்துக் கணக்கில் கடந்த....... முதல்........
வரையிலான காலத்தில் என்னென்ன விதமான நிதி வரவுகள் வந்துள்ளன அரசு நிதிகள் செலுத்தப்பட்டுள்ளது அந்த நிதிகள் எப்படி எந்த வகைக்காக செலவு செய்யப்பட்டது என்பதையும் தேதி வாரியாக காட்டும் பஞ்சாயத்தின்......
.. முதல்......தேதி வரையிலான அனைத்து மெயின் கணக்குப் புத்தகத்தின் மற்றும் வங்கியின் அனைத்து வகையான பாஸ் புத்தகத்தின் நகலையும் அளிக்க வேண்டுகிறேன்.
5) மேற்படி தகவல்களுக்குண்டான ஆவணங்களை பெற மொத்த பக்கம் கணக்கிட்டு அதற்குறிய கட்டணங்களை எங்கு எப்படி எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதனை எனக்கு உரிய காலத்திற்குள் தகவலாக வழங்கவும்
மேற்படி தகவல்கள்,நகல்களின் அனைத்து பக்கங்களிலும் பொது தகவல் அலுவலர் அவர்கள் சான்றொப்பம் பெற்று அலுவலக முத்திரையுடன் சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர் அவர்களின் ஆதார் எண் விபரங்களை குறிப்பிட்டு பிரிவு 7(1)ன் படி வரையறுக்கப்பட்ட காலக் கெடுவிற்குள் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேற்படி தகவல்களை பெற ரூபாய் 10 க் கான நீதி மன்றம் வில்லை ஒட்டியுள்ளேன்.
நாள்
இடம்.
இப்படிக்கு.
Comments
Post a Comment